உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 108 திருவிளக்கு பூஜை

குமாரபாளையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 108 திருவிளக்கு பூஜை

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன் பாளையம், சத்யஜோதி ஐயப்ப
பக்தர்கள் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின், 41ம் ஆண்டு சபரிமலை யாத் திரையை முன்னிட்டு அகல் விளக்கு ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.

மூத்த குருசாமிகள் நாச்சிமுத்து, சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். காவேரி நகர்
பத்ரகாளியம்மன் கோவில் முன்பிருந்து, அங்காளம்மன் கோவில் வரை அகல் விளக்கு
ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி அருள்பாலித்தவாறு வந்தார். அதன்பின், அங்காளம்மன் கோவில் முன் நடந்த, திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பிரசாதம், அன்னதானம்  வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !