உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): உணர்ச்சிவசத்தை தவிர்த்தால் எல்லாம் சுகமே

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): உணர்ச்சிவசத்தை தவிர்த்தால் எல்லாம் சுகமே

எதிர்நீச்சல் போடும் மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆனால் ராகு, குரு, சனி சாதகமாக இல்லை. சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளதால் தொழிலில் சிறு பின்னடைவு ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு குறையலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். உணர்ச்சிவசப்படும் சூழல்கள் உருவாகலாம். இதைத் தவிர்த்தால் சுப முடிவு கிடைக்கும்.  ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை, சனி வக்கிரம் அடையும் போது கெடுபலன்கள் குறையும். குரு ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை அல்ல. அவரது 7,9-ம் இட பார்வையாலும், பிப். 14ல் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறும் சமயத்திலும் அவர் தரும் கெடுபலன் குறையும். முன்பை விட பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.

குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்கும்.  ராகு 5-ம் இடமான கடகத்தில் இருந்து பிரச்னையை உருவாக்கலாம். கேது 11-ம் இடமான மகரத்தில் இருந்து வளத்தை தருவார். மற்ற கிரகங்கள் தரும் பலனை கட்டுப்படுத்துவார். ஆண்டின் ஆரம்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்–-மனைவி விட்டுக் கொடுத்து போனால் பிரச்னை வராது. திருமணம், சுப நிகழ்ச்சிகள் பிப்.13-க்கு பிறகு கைகூடும். அதிக முயற்சி எடுத்தால் வீடு கட்டலாம். ஆனால் அதற்கான கடன், தொல்லை தரும்.  தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் அளவு, செலவு அதிகரிக்கும். கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. யாரிடமும் கவனமுடன் பழகவும். ஆண்டின் பிற்பகுதியில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும்.

பணியாளர்களுக்கு ஆண்டு துவக்கத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகுதியில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சீரான முன்னேற்றம் காணலாம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிலர் எதிர்பாராத இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக சரியாகி விடும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்களுக்கு முயற்சி எடுத்தால் தான் ஒப்பந்தங்கள் வரும். உங்களுக்கு வர வேண்டிய விருது போன்றவை தட்டிபறிக்கப்படலாம். பண விஷயத்தில் பின்னடைவு இருக்காது. அரசியல்வாதிகள் ஓரளவு பலன் காண்பர். மாணவர்கள் முயற்சி எடுத்து படித்தால் நல்ல தேர்ச்சி இருக்கும். விரும்பிய பாடத்தை பெறலாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம். அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகள் சொத்து வாங்கலாம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காணலாம். சிறப்பான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கூடுதல் வருமானம் வரும்.

பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனை யும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். புனித தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவீர்கள்.

பரிகாரம்
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்.
* செவ்வாயன்று நரசிம்மர் வழிபாடு.
* குரு பகவானுக்கு அர்ச்சனை. செல்ல வேண்டிய கோயில்பிள்ளையார்பட்டி  கற்பக விநாயகர் கோயில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !