உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. நாளை(ஜன.2ல்) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

இக்கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். இங்குள்ள பச்சை மரகத நடராஜர் சிலை பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் நடக்கும். ஆருத்ரா தரிசன விழாவை மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதற்காக காலையில், அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனம் களையப்பட்டது. தொடர்ந்து 18 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. சந்தனாதி தைலம் பூசப்பட்டு, தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இந்த அபூர்வ நிகழ்வை பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசித்தனர். நாளை(ஜன.2ல்) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !