உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதிரை திருக்கல்யாண உற்சவம்

திருவாதிரை திருக்கல்யாண உற்சவம்

பெருந்துறை: பெருந்துறை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, திருவாதிரையை முன்னிட்டு, நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி உற்சவ சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை, மஹாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவீதி உலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !