பகலவன் வணங்கிய பரிதியப்பர்
ADDED :2866 days ago
தஞ்சாவூரில் உள்ள மேவுளூரிலுள்ளது, மங்களாம்பிகை உடனுறை பரிதியப்பர் கோயில். மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் சூர்ய குலத்தில் தோன்றிய சிபிச்சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார். மூலவர் பரிதியப்பர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு அபூர்வம் என்கின்றனர்.