நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
                              ADDED :2849 days ago 
                            
                          
                          நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி பக்தர்கள் மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு இருந்து தினமும் அதிகாலை பஜனை பாடல்கள் பாடியபடி மாடவீதியை வலம் வந்து வழிபட்டனர். பாவை நோன்பு முடிந்ததை முன்னிட்டு கூடாரவல்லி பூஜை நடந்தது. வேணுகோபால சுவாமிக்கும் ஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனயும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் சமேதராய் வேணுகோபாலசுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். திருமணமாகாத பெண்கள் ஆண்டாளுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. ஏராளாமான திருமணமாகாத ஆண்களும் பெண்களும் ஆண்டாளுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.