பழநி தைப்பூச விழாவிற்கு பக்தர்களுக்கு ஷவர் ஏற்பாடு
பழநி, பழநி தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் புனித நீராட ’ஷவர்’ குளியல் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள்
செய்ய தரப்பட்டுள்ளது. பழநி ஞானதண்டாயுத பாணிசுவாமி கோயில் தைப்பூச விழா ஜன.25ல் துவங்கியது. தொடர்ந்து பிப்.,3வரை நடக்கிறது. பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மின்வசதியுடன் கூடிய நிழற்பந்தல்கள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழையின்றி பக்தர்கள் நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவை தண்ணீர் இன்றிகுட்டையாக மாறியுள்ளது. இதனால் தைப்பூச விழா பக்தர்கள் ஆறு, குளங்களில் நீராடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சண்முகநதிக்கரை மற்றும் இடும்பன் குளத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக ’ஷவர்’ குளியல் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல தற்காலிக நவீன கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.