உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமனின் ஆசான்

அனுமனின் ஆசான்

சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயருண்டு. ஆனால் அந்த அனும னுக்கு பாடம் நடத்திய பெருமை, சூரியனை சேரும். ஒரு முறை அனுமன்,  தவறாக பழம் என கருதி வான மண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டது. இதனால் உலகமே ஒரு கணம் அசையாமல் நின்றது. விஷயத்தை அறிந்த இந்திரன்,  அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயு பகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமடைந்த வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன் அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் அனுமன் “சர்வ வியாகரண பண்டிதன்” என்னும் சிறப்பு பெயர் பெற்றார்.  இப்பெருமைக்கு காரணமானவர் அனுமனின் ஆசானான சூரியனே.
பக்திக் கதை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !