உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

வீர ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

காடையாம்பட்டி: முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். மாட்டு பொங்கலையொட்டி, ஓமலூர் பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், காடையாம்பட்டி, வீர ஆஞ்சநேயர், முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீவட்டிப்பட்டி அடுத்த குண்டுக்கல், பைபாஸ் சாலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

* ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நந்தி பகவானுக்கு காய்கறி, பழங்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட உணவுகளை அளித்து, உலக நன்மை வேண்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !