செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :2929 days ago
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், திருவோத்தூர் பகுதியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நாளை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. வரும், 27 வரை, தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அலங்கரிக்கப்பட்டு, வெவ்வேறு வாகனத்தில் தினமும் வீதி உலா நடக்கும், விழாவை முன்னிட்டு, தினமும் மாலை நேரங்களில், சமய தொண்டு மன்றத்தினரால் சமய சொற்பொழிவுகள் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, திருவண்ணாமலை அறநிலையத்துறை உதவி ஆணையாளர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் உமேஷ்குமார், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.