பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ’ஸ்டிக்கர்’
ADDED :2821 days ago
ஈரோடு: தைப்பூசத்தை ஒட்டி நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஈரோடு வழியாக பழநி கோவிலுக்கு செல்கின்றனர். கடந்த மாதம் தாராபுரம் அருகே, அதிகாலையில் நடந்து சென்ற பக்தர்கள் மீது, அரசு பஸ் மோதியதில், ஆறு பேர் பலியாகினர். இதனால், பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலை அல்லது முதுகு பகுதியில், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு, கொல்லம்பாளையம் வழியாக சென்ற, 150 பக்தர்களுக்கு, எஸ்.பி., சிவக்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார், ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கினர்.