உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றில், தீர்த்தவாரி முடிந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார். வழிநெடுகிலும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தை மாதம், 5ல், விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில், கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் துரிஞ்சலாற்றிலும் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை பகுதி தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில், மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரர், சந்திரசேகரர் (அருணாசலேஸ்வரர்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட சந்திரசேகரர் நேற்று, திருவண்ணாமலை கோவில் வந்தடைந்தார். இந்நிலையில், வரும் 23ல், கலசபாக்கம் செய்யாற்றில், ரதசப்தமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !