உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பிப்.5 கும்பாபிஷேகம்
ADDED :2870 days ago
கீழக்கரை : உத்தரகோசமங்கையில் வராகி மங்கை மாகாளியம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் வடக்கு பார்த்த முகமாக, தனி சன்னதியுடன் இப்பகுதியில் மட்டுமே இக்கோயில் அமைந்துள்ளது. கடந்த 8.11.2000 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயிலில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ண பூச்சு வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் பிப்.,5 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலைகள் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.