உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண தடை நீங்க யாகம்: ஆண்கள், பெண்கள் ஆர்வம்

திருமண தடை நீங்க யாகம்: ஆண்கள், பெண்கள் ஆர்வம்

பெருந்துறை: பெருந்துறையில், திருமணத் தடை நீங்க, சிறப்பு யாகம் நடந்தது. இதில் திருமணமாகாத ஆண், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெருந்துறையில், சென்னிமலை சாலையில், தனியார் அரங்கில், அண்ணமார் சுவாமி கதை, உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி, ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பொன்னர் சங்கர் திருமணக் காட்சி பாடலாக படிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, திருமணத் தடை நீங்க, சிறப்பு யாகம் நடந்தது. இதில், பங்கேற்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !