வேணுகோபால சுவாமி கோவிலில் 24 மணி நேர ஹரே ராம பஜனை
ADDED :2913 days ago
ஊத்துக்கோட்டை : ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், 34ம் ஆண்டு ஹரே ராம பஜனை விழாவை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பெரிஞ்சேரி கிராமத்தில் உள்ளது ருக்மணி சத்யபாம சமேத வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஹரே ராம பஜனை நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. இவ்விழா, 26ம் தேதி இரவு, சுவாமிக்கு துளசி பூஜையுடன் துவங்கியது. மறுநாள், 27ம் தேதி விடியற்காலை, 4.45 மணிக்கு, கலசஸ்தாபன பூஜை, விஷ்ணு சகஸ்ரநாமம், ஆண்டாள் திருப்பாவை பாராயணம், அகண்ட தீபம் ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அன்றைய தினம், காலை, 6:00 மணிக்கு துவங்கிய ஹரே ராம பஜனை நிகழ்ச்சி தொடர்ந்து, 24 மணி நேரம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கோமாதா பூஜை மற்றும் நகர சங்கீர்த்தனை ஆகியவை நடந்தது.