வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்
ADDED :2915 days ago
வடலுாரில், 1867ம் ஆண்டு, மே 23ம் தேதி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையை நிறுவிய வள்ளலார், அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்க துவங்கினார். வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெறுகிறது. கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறும். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு, ஜோதி தரிசனம், வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் செய்வர்.