திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் வருமானம்
ADDED :2998 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் உள்ள 33 நிரந்தர உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் 41 லட்சத்து 72 ஆயிரத்து 439 ரூபாய், 248 கிராம் தங்கம், இரண்டு கிலோ 470 கிராம் வெள்ளி இருந்தது. கோயில் பணியாளர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஐயப்பா சேவா சங்கத்தினர். பாடசாலை மாணவர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.