பணிவை விரும்பும் துர்க்கை!
ADDED :2819 days ago
கும்பகோணம் – மணல்மேடு சாலையில் உள்ள மரத்துறையில் ஹரிஹரபுத்ர சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு, துர்க்கை சன்னதி விசேஷமானது. பொதுவாக கோயில் பிரகாரத்தில் இருக்கும் துர்க்கை, இங்கு நுழைவு வாசலில் வடக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் இருக்கிறாள். குனிந்து பார்த்தால் தான் அம்மனின் முழு உருவத்தை தரிசிக்க முடியும். பக்திக்கு பணிவு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.