பொள்ளாச்சி நரசிம்மர் கோவிலில் சிறப்பு ஹோமம்!
ADDED :2815 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நேற்று நடந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக, பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம், நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு ேஹாமம், அலங்காரம், நைவேத்தியம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து, மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடந்தது.