உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெகமம் நித்தீஸ்வரர் கோவில் திருப்பணி பூஜைகள் நிறைவு

நெகமம் நித்தீஸ்வரர் கோவில் திருப்பணி பூஜைகள் நிறைவு

பொள்ளாச்சி: நெகமம் கடைவீதியில், 700 ஆண்டுகள் பழமையான நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர்சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளாக கோவில் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை. சமீபத்தில், அனைத்து கட்சியினர், ஆன்மிக பெரியவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற, திருப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, பொதுமக்கள் ஒருங்கிணைந்து,கூட்டுப்பிரார்த்தனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் திருப்பணி பூஜைகள் துவங்கியது. திலக ேஹாமம், சாயுஜ்ய பூஜை, தோஷ பரிகாரங்கள் செய்யப்பட்டன. நேற்று, திருப்பணி பூஜைகள் நிறைவு பெற்றது. அடுத்த சில நாட்களில் தொல்லியல் துறையினர் கோவிலுக்கு வருகின்றனர். அவர்களுடன் கலந்தாலோசித்து, பழமை மாறாமல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !