அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான பூஜை
ADDED :2796 days ago
திருப்பூர்:முத்தணம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், நந்தீஸ்வரனை அழைத்தல், வெற்றிலை பாக்கு பிடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவில், மகா சிவராத்திரி மயான பூஜை நடந்தது.