ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்
ADDED :2799 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பிப்.,6ல் கொடி ஏற்றம் நடைபெற்றது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி, ஆடித்திருக்கல்யாணம் விழா முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி சிவராத்திரி விழாவான நேற்று(பிப்.13ல்) சுவாமி சன்னதியில் புனித கங்கை நீரில் புனித அபிஷேகமும், அன்று இரவு அலங்கார வெள்ளி ரதம் புறப்பாடும் நடைபெற்றது. இன்று (பிப்.,14ல்) கோயிலில் மாசி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்திருந்தார்.