ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்
ADDED :2798 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாசி தேரோட்டம் நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,6ல் மாசி சிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டது. 9ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.பக்தர்கள் திருத்தேரின் வடம் இழுத்து நான்கு ரதவீதி வழியாக உலா வந்தது. கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன்சேதுபதி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின், பேஷ்கார்கள் கமலநாதன், கண்ணன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.