உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் மாவட்டத்தில் சிவராத்திரி உற்சவம்

கடலூர் மாவட்டத்தில் சிவராத்திரி உற்சவம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி உற்சவம் நடந்தது. இதையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 6:00 மணிக்கு பள்ளியறை பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு சண்டிகேஸ்வரர், அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு முதல் கால பூஜையைத் தொடர்ந்து இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜை நடந்தது. பின்னர், துர்கை, யுக முனிஸ்வரர், சிவன், லிங்கேஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்த சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பத்தகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !