மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2785 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2785 days ago
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஏழு நாள் தெப்ப உற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று, பார்த்தசாரதி பெருமாள், தெப்பத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான, தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், தெப்பத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தெப்ப உற்சவத்தில், இன்றும், நாளையும், பார்த்தசாரதி சுவாமியும்; அடுத்த நான்கு நாட்களில், நரசிம்மர், ரங்கநாதர், ராமர், கஜேந்திரரும், தினமும் மாலை, 6:30 மணிக்கு தெப்பத்தில் வலம் வந்து, அருள்பாலிக்கின்றனர்.
2785 days ago
2785 days ago