உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம் கோலாகலம்

கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம்: சித்தேரியில் கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம், விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. கூரத்தாழ்வானின், 1,008வது திருவவதார மஹோத்ஸவம், ஜன., 27ல் துவங்கி, பிப்., 5 வரை, தொடர்ந்து, 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது. நேற்று கூரம் அடுத்த சித்தேரியில், கூரத்தாழ்வான் நடவாவி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், காலை, 8:00 மணிக்கு கூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து, சித்தேரியில் உள்ள அவரது சொந்த நிலத்திற்கு எழுந்தருளினார். ஏரியில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வரப்பட்டு, திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, திருப்பாவை சாற்றுமறை நிலத்தில் பக்தி உலா, வீதியுலா, இரவு, 9:00 மணிக்கு சயனன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !