உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் மார்ச் 1ல் தெப்ப உற்சவம்

பெருமாள் கோவிலில் மார்ச் 1ல் தெப்ப உற்சவம்

மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவில், மாசிமக தெப்ப உற்சவம், மார்ச், 1ம் தேதி நடைபெறுகிறது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவில். பாற்கடலில் இறைவனை காண, இங்கு கடல்நீரை கைகளாலேயே இறைத்து, கடலில் வழி ஏற்படுத்த முயன்ற புண்டரீக முனிவருக்கு, இறைவன் காட்சியளித்து, அவரது திருவடியிலும் இணைத்துக் கொண்டார். கோவிலில், ஸ்தலசயன பெருமாளாக, நிலமங்கை தாயாருடன் வீற்றுள்ளார். அவருக்கு, ஆண்டுதோறும், மாசி மாத பவுர்ணமி நாளின் முன்தினம் இரவு, தெப்ப உற்சவம்; மறுநாள் காலை, சுவாமி, கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி என, நடைபெறும். தற்போது, மார்ச், 1ம் தேதி, தெப்ப உற்சவம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாசி மாத பவுர்ணமி, நீண்ட காலமாக, பிப்ரவரி மாதத்தில் இடம்பெற்று, தெப்ப உற்சவம் நடைபெறும். கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் இடம்பெற்று, தற்போதும் அவ்வாறே இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !