உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபாணிக்கு காவிரி தீர்த்தம் எடுத்து மாயர் பூஜை

பாலதண்டாயுதபாணிக்கு காவிரி தீர்த்தம் எடுத்து மாயர் பூஜை

கிருஷ்ணராயபுரம்: பழநி பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடம் எடுத்துச் சென்று, புணவாசிப்பட்டியில் உள்ள பாலதணடாயுதபாணிக்கு, மாயர் பூஜை செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, புணவாசிப்பட்டியில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் பழநி பாத யாத்திரை செல்வதற்கு முன், காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, பாலதண்டாயுதபாணிக்கு மாயர் பூஜை நடத்தி, பாத யாத்திரையை தொடங்குவர். இதன் படி, நேற்று மாலை, அப்பகுதி மக்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, கடைவீதி வழியாக ஊர்வலமாக தண்டாயுதபாணி கோவிலுக்கு சென்றனர். சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, பழநி பாத யாத்திரையை தொடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !