காரைக்குடி பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 21-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 22-ம் தேதி நவக்கிரக ஹோமம் நடந்தது. (பிப்.23) காலை 7:15 மணிக்கு அஷ்டலட்சுமி ஹோமம், பிரசன்ன அபிஷேகம் நடந் தது. மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தி, இரவு 7:45 மணிக்கு கடஸ்தாபனம், முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 9:30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் வருகிற 26-ம் தேதி காலை 9:55 முதல் 10:10 மணிக்குள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலை மையில் நடக்கிறது. அன்று இரவு 1:00 மணியளவில் பொன்னழகி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
விழாவையொட்டி இரவு ஏழு மணிக்கு பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பொன்னழகி அம்மன் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.