உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை திருவொற்றியூரில் மாசி மக பூஜை

சென்னை திருவொற்றியூரில் மாசி மக பூஜை

சென்னை : வடிவுடையம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பதற்காக, மண்ணடியில் இருந்து, தண்டாயுதபாணி சுவாமி, ரதங்களில் (பிப். 25)  புறப்படுகிறார்.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள, தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில், பிரம் மோற்சவ விழா நடந்து வருகிறது. அதில் பங்கேற்க, மண்ணடி தண்டாயுதபாணி சுவாமி, திருவொற்றியூர் வருவது வழக்கம். அதன்படி, மாசி மக பூஜை, (பிப். 25) துவங்குகிறது.

சென்னை, மண்ணடி, பவளக்கார தெருவில் உள்ள, தண்டாயுதபாணி கோவில் விடுதியில் இரு ந்து, ரதங்களில், தண்டாயுதபாணி சுவாமி, திருவொற்றியூர் விடுதிக்கு, (பிப். 25)  காலை, 7:00 மணிக்கு புறப்படுகிறார். பவளக்காரன் தெருவில் இருந்து ராயபுரம் மேம்பாலம், வண்ணா ரப்பேட்டை, ஜி.ஏ.ரோடு, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, டி.எச்.ரோடு வழியாக, திருவொற்றியூர் நகரத்தார் மண்டபத்தை, ஊர்வலம் சென்றடையும்.

வழி நெடுகிலும் பக்தர்கள், தண்டாயுதபாணிக்கு அர்ச்சனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந் து வருகின்றன. திருவொற்றியூரில், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. பிப்., 26ம் தேதி, மகேஷ்வர பூஜை நடக்கிறது. பிப்., 28ம் தேதி, மகிழடி சேவை நடக்கிறது.

இதையடுத்து, மார்ச், 1ம் தேதி பகல், 3:00 மணிக்கு, தண்டாயுதபாணி சுவாமி, மண்ணடி திரும் புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !