குளித்தலை கடம்பர்கோவில் மாசி மகம் திருவிழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED :2894 days ago
குளித்தலை : கடம்பர்கோவில், மாசி மகம் திருவிழாவில்,சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
குளித்தலை கடம்பர்கோவில் முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வர் கோவில் மாசிமகப் பெருந்திருவிழாவையொட்டி, ஆறாம் நாள் நிகழ்ச்சியாக (பிப்.25) காலை, சுவாமி திருக் கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருமணமாகாத, ஆண்கள், பெண்கள், பெற்றோர் கலந்து கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த நாள் என்பதால், ஆறாம் நாள் நிகழ்ச்சியில், குளித்தலை, அய்யர்மலை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணியளவில், யானை, கிளி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.