மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :2893 days ago
திருமால்பூர் : மணிகண்டீஸ்வரர் கோவிலில், தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில் அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. மாசி மாத பிரம்மோற்சவம், 20ல் துவங்கியது. விழாவில், மணிகண்டீஸ்வரர் அம்பாளுடன் பல வாகனங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வந்தார். நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருமால்பூர் கிராமத்தில் பிரதான தெருக்களின் வழியாக தேர் சென்று, மீண்டும் தேரடிக்கு வந்தது. திருமால்பூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள், சிவனை வழிபட்டனர்.