உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார்

காஞ்சிபுரம் : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார்.

மூச்சு திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார். பல நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் ஸித்தி அடைந்தார். 84 வயதாகும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் 1994 ம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.  முன்னதாக 1954-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயேந்திரரின் மறைவையொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !