உலக நலன்வேண்டி பழநியில் மகா ருத்ரயாகம்
ADDED :2880 days ago
பழநி: பழநி சங்கராலயம் சார்பில், உலக நலன்வேண்டி மகா ருத்ரயாகம் நாளை(மார்ச் 1) வரை நடக்கிறது. பழநி அடிவாரம் சங்கராலயம் மடத்தில், பிப்.26-ல் யாகம் துவங்கியது. மகாருத்ர யாகத்தை முன்னிட்டு, 33 கும்பகலசங்களில் புனித கங்கா தீர்த்தம் வைத்து மகாருத்ரயாகம் பிப்.,26ல் துவங்கியது. வாஸ்துஜெபம், திருஆவினன்குடி கோயிலில் அபிேஷகம் செய்து, மகாகணபதி ேஹாமத்துடன் நடந்தது. 50க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் மூலம் தொடர்ந்து சுதர்சன ேஹாமம், துர்க்கா சூக்த ேஹாமம், விஷ்ணு சகஸ்ர நாமஜெபம், ருத்ர அபிேஷகம் உட்பட 1331 முறை ருத்ர ஜெபமும், 121 முறை ஹோமபூஜையும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை மகா ருத்ர யக்ஞ கமிட்டி, சங்கராலயம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.