உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசிமக பெருவிழா

வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசிமக பெருவிழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப்பெருவிழா விமரிசையாக நடந்தது.இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுவாமி, வள்ளி, தெய்வானை, அருகில் மற்றொரு சன்னதியில் எழுந்தருளிய ஆறுமுகப்பெருமானுக்கும் 18 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சுப்பிரமணியர் மரிக்கொழுந்து செண்டலங்காரத்திலும், ஆறுமுகப்பெருமான் அரளிப்பூ அலங்காரத்திலும் எழுந்தருளினர். பக்தர்கள் திருமுருக பஜனையுடன் வழிபாடு செய்து வழிபட்டனர். மாலையில் கந்தர்சஷ்டி விழாக்குழுவின் சார்பில் சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுளை சஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன், பக்தசபா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !