உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அழகர்கோவில் தெப்பத்திருவிழா

மதுரை அழகர்கோவில் தெப்பத்திருவிழா

மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தெப்பத்திருவிழா பொய்கைக்கரைப்பட்டியில் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு கஜேந்திர மோட்சம் நடந்தது. கோயிலில் இருந்து நேற்று காலை 8:00 மணிக்கு சர்வ அலங்கார சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின் மண்டூக தீர்த்தம் எனும் பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி மதியம் 1:30 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !