உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயேந்திரர் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றி நாதஸ்வர கலைஞர்கள் இசையஞ்சலி

ஜெயேந்திரர் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றி நாதஸ்வர கலைஞர்கள் இசையஞ்சலி

திருவண்ணாமலை: ஜெயேந்திரர் மறைவிற்கு, மோட்ச தீபம் ஏற்றி, நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன், இசை அஞ்சலி செலுத்தினர். காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான், கலைமாமணி பிச்சாண்டி தலைமையில், நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள், ஜெயேந்திரர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டியும், அருணாசலேஸ்வரர் கோவில் முன் மோட்ச தீபம் ஏற்றி, நாதஸ்வரம், தவில் இசை அஞ்சலி செலுத்தினர். இதில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !