போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
ADDED :3084 days ago
திருவண்ணாமலை: போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை அடுத்த, மங்கலம் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான, போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தேரோட்ட விழா நேற்று நடந்தது. முன்னதாக, போர்மன்ன லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, போர்மன்ன லிங்கேஸ்வரர் சிலையை, தேரில் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக, பக்தர்கள் இழுத்து சென்றனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.