உடுமலை ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2784 days ago
உடுமலை: உடுமலை, சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. உடுமலை, தாராபுரம் ரோடு சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவிலில், கடந்த மாதம் 20ம் தேதி கணபதி ேஹாமத்துடன் நோன்பு சாட்டப்பட்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து, பிப்., 27ல் கம்பம் நடப்பட்டது. பத்கர்கள், கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். திருமூர்த்திமலை மற்றும் மாரியம்மன் கோவில்களிலிருந்து, ராஜகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்றுமுன்தினம், மாவிளக்கு மற்றும் பூவோடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு ராஜகாளியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அம்மனுக்கு மகாதீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர்.