பழுதடைந்த கோவில் மேற்கூரை அறநிலையத்துறை கவனிக்குமா?
ADDED :2860 days ago
பல்லடம் : அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில் மேற்கூரை பெயர்ந்துள்ளது, பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது; கோவிலை, அறநிலையத்துறை புதுப்பிக்க வேண்டும். பல்லடத்தை அடுத்த அல்லாளபுரத்தில், பழமையான ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி உடனமர் உண்ணாமுலை அம்மன் கோவில் உள்ளது. பாரமரிப்பு பணி செய்யப்படாமல், இக்கோவில் சிதிலமடைந்து வருகிறது. குறிப்பாக, மூலஸ்தானத்தின் மேற்கூரை பெயர்ந்து, பக்தர்களை அவ்வப்போது பதம் பார்த்து வருகிறது. விபத்து ஏற்படும் முன், கோவிலை அறநிலையத்துறையினர் புதுப்பித்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இக்கோவிலில், 1994ம் ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம் நடத்தப்படவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் இணைந்து, மோசமான நிலையிலுள்ள கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.