யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 17வது ஆராதனை விழா
ADDED :2764 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், நுாற்றாண்டு விழாவில், 17வது ஆராதனை விழா, நேற்று முன்தினம், காலை சிறப்பு யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று நடந்த விழாவில், காலை, 7:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட, வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு, சத ருத்ர பாராயணம், ருத்ர ேஹாமம், ருத்ர யாகம், 17வது ஆராதனை விழா நடந்தது. மூலவர் யோகிராம் சுரத்குமார், லிங்க சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, பக்தர்களின் பஜனை, மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, கணேஷ் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை, 6:15 மணி முதல், 8:15 மணி வரை, கலைமாமணி குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, ஆஸ்ரம நிர்வாகி, ஓய்வு பெற்ற ஜஸ்டீஸ் அருணாசலம் செய்திருந்தார்.