திருப்பூர் கோவில் சிலைகள் விவரம் வெளியிட கோரிக்கை
ADDED :2766 days ago
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில் உள்ள, உற்சவர் சிலைகள் மற்றும் உபயதாரர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நல்லுார் நுகர்வோர் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: விஸ்வேஸ்வரர் கோவிலில், 33 உற்சவர் சிலைகள்; 120 கற்சிலைகள் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. வீரராகவப் பெருமாள் கோவிலில், 21 உற்சவர் சிலைகள்; 13 கற்சிலைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, நகை, ஆபரணங்கள் விவரம் வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு கோவில்களிலும் உள்ள உற்சவர் சிலைகள் குறித்தும், அவற்றின் உபயதாரர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.