உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

காரைக்குடி: தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் நல்லாதரவோடு அரியக்குடி, ஸ்ரீநிவாசப் பெருமாள் அறக்கட்டளையும் அரியக்குடி அலர்மேலு மங்கைத் தாயார் அறக்கட்டளையும்  இணைந்து நடத்தும்  அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா வருகிற 26.3.18 அன்று  காலை 6.18 - 7.18 மணிக்குள் சிறப்பாக நடைபெற இருக்கிறது. ஓங்கி உலகளந்த உத்தமானகிய விண்ணளந்த கீர்த்தி மண்ணளந்த பெருமாள் குடிகொண்டு உலகமக்களுக்கு அருள்பாலிக்கும் 108 திவ்யதேசங்களுக்கு ஒப்பான சிறப்புடையது காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் இடையே சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில். சிவநெறிச் செல்வர்களாகிய நகரத்தார் பெருங்குடியினர் திருமாலுக்கும் அடியவர்கள் என்பதையும் அவர்களது சமயப்பொதுமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுச் சிறப்புக் கொண்டது இத்திருக்கோயில்.

தல வரலாறு: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவபக்தரை ஆட்கொண்டு தமக்குக் கோயிலைக் கட்டிக்கொண்டவன் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருவேங்கடமுடையான். ஆண்டுதோறும் திருப்பதிக்குக் கால்தேய நடந்து செல்பவர் அரியக்குடி சிவபக்தர் சேவுகஞ்செட்டியார், ஊர் மக்கள் வழங்கிய உண்டியல் கலசத்தையும் ஏந்திச்செல்வார். இந்தச் செல்வர் வயது முதிர்ந்த காலத்திலும் ஓராளின் துணையோடு உண்டியல் கொண்டு நடந்து சென்றவர். தளர்ந்து மயங்கி வீழுந்துவிட்டார். திருவேங்கடமுடையான் அவரது கனவில் தோன்றி ஏன் வழியில் இந்தப்பாடு? உனது ஊரிலேயே எனக்கு ஓராலயம் எழுப்பி வழி படு என்று கூறியதோடு அரியக்குடியில் அதற்கான இடத்தையும் அடையாளம் காட்டினான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவேங்கடமுடையான் கோயிலுக்குத் திருப்பதி கோயிலின் அருள் வந்தவண்ணம் இருந்துள்ளது. இங்குள்ள உத்சவ மூர்த்தி விக்ரகமும் அருள்வழங்கும் சடாரியும் (திருவடி) திருப்பதியிலிருந்து வந்ததாக வரலாறு.

முன்னைய குடமுழுக்கு விழாக்கள்: இத்திருக்கோயிலுக்கு 1902 ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 1999ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழா நிறைவெய்தியது.

இன்றைய குடமுழுக்குப் பெருவிழா: பத்தொன்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது கோயிலின் சொர்க்கவாசல், தசாவதார மண்டபம், பெரிய ராஜ கோபுரம், அடுத்த ரிஷி கோபுரம், மற்றைய ஆறு கோபுரங்கள், ஆறு கர்ப்பகிரகங்கள், மண்டபங்கள் ஆகிய பலபகுதிகளைச் செவ்வகையாகச் செப்பனிட்டும் புதுப்பொலிவு கூட்டும் வர்ணம் பூசியும் பெருமைமிகு அன்னதான மண்டபத்தைப் புதிதாகக் கட்டியும், வாகனங்களுக்கு வண்ணம் பூசியும், திருக்குளத்தை ஆழப்படுத்தி ஆழ்கிணறு அமைத்தும் வரும் ஹேவிளம்பி ஆண்டு பங்குனித் திங்கள் 12 ம் நாள் (26-3-2018) திங்கட்கிழமை காலை 6.18 முதல் 7.18 மணியளவில் திருக்குட சம்ப்ரோக்ஷண நன்னீராட்டு விழா நிகழவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்:
22-3-2018: காலை 8.30 -12.30 மணி    யஜமானர் வர்ணம், ஆச்சார்ய வர்ணம், அனுக்ஞை, மஹா சங்கல்பம், புண்யாகவாசனம் பகவத் ப்ரார்த்தனை, ம்ருத்ஸங்கிரஹணம், வாஸ்து ஸாந்தி.

மாலை  5.30 மணி முதல் காலம்     புண்யாகவாசனம், அங்குரார்பணம், அக்னி ப்ரதிஷ்டை, கும்பபூஜை கலா கர்ஷணம், யாகசாலா ப்ரவேசம், ஸப்த கல ப்ரோக்ஷ் ரக்ஷா பந்தனம், உக்த ஹோமம், வேத ப்ரபந்த தொடக்கம், பூர்ணாஹூதி விசேஷ திருவாராதனம், சாற்று முறை, ப்ரஸாத விநியோகம்.

23-3-2018:  காலை 7.30 - 12.30 மணி வரை இரண்டாம் காலம் விஸ்வரூபம், காலஸந்தி, புண்யாகவாசனம், அக்நி ஆராதனம் மஹாஸாந்தி, ஹோமம், உக்தஹோமம், பூர்ணாஹுதி, விசேஷ திருவாராதனம் சாற்றுமுறை ப்ரஸாத விநியோகம்.

மாலை 5.30 - 9.30 மணி வரை மூன்றாம் காலம்  சாயரட்சை, புண்யாகவாசனம் அக்னி ஆராதனம், ஸயனாதி வாசம், ஸர்வ தேவார்ச்சனம் ஹௌத்ர ப்ரஸம்ஸனம். உக்த ஹோமம், மூர்த்தி ஹோமம், மஹா ஸாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை ப்ராஸாத விநியோகம்.

24-3-2018: காலை 7.30 -12.30 மணி வரை நான்காம் காலம் விஸ்வரூபம், காலஸந்தி, புண்யாகவாசனம், அக்நி ஆராதனம் மஹா ஸாந்தி ஹோமம், உக்த ஹோமம், பூர்ணாஹுதி, விசேஷ திருவாராத சாற்றுமுறை, ப்ரஸாத விநியோகம்.

மாலை 5.30 - 9.00 மணி வரை ஐந்தாம் காலம் சாயரட்சை, புண்யாகவாசனம், அக்நி ஆராதனம், ஸயனாதி வாஸம், உக்த ஹோமம், மஹா ஸாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி, விசேஷ திருவாராதனம், சாற்று முறை, ப்ரஸாத விநியோகம்.

25-3-2018: காலை 7.30 -12.30 மணி வரை ஆறாம் காலம் விஸ்வரூபம், காலஸந்தி, புண்யாகவாசனம் அக்நி ஆராதனம் மஹா ஸாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ப்ரதான ஹோமம், உக்த ஹோமம், பூர்ணாஹூதி, விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை ப்ரஸாத விநியோகம்.

மாலை 3.00 -5.30 மணி வரை ஏழாம் காலம் பிம்ப வாஸ்து ஹோமம், அக்ஷி மோசன, அதிவாஸ த்ரய ஹோமம், சாயரட்சை, அக்நி ஆராதனம், மூர்த்தி ஹோமம், ப்ரதான ஹோமம், உக்த ஹோமம், பூர்ணாஹுதி, மஹாஸாந்தி, கடம் புறப்பாடு, பிம்ப சுத்தி திருமஞ்சனம் விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை ப்ரஸாத விநியோகம்.

மாலை 6.10  கோ பூஜை

26-3-2018: காலை 4.00 மணி எட்டாம் காலம் விஸ்வரூபம், புண்யாகவாசனம் அக்நி ஆராதனம், மூர்த்தி ஹோமம், மஹா பூர்ணாஹுதி
காலை 5.00 மணி கடம் புறப்பாடு

காலை 6.18 -7.18 மணி வரை அனைத்து விமான சம்ப்ரோக்ஷணம் அனைத்து ராஜகோபுரங்கள் சம்ப்ரோக்ஷணம்
காலை 7.18 மணி முதல் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத திருவேங்கடமுடையான் மூர்த்தி சம்ப்ரோக்ஷணம், திருவாராதனம் ப்ரம்ப கோஷம் விசேஷ வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்த ப்ரஸாத விநியோக கோஷ்டி, யஜமானர்கள், மரியாதை
காலை 9.30 மணி ஆச்சார்யாள் மரியாதை, மாலை 5.00 மணி கல்யாண உற்சவம், இரவு 9.00 மணி கருட சேவை புறப்பாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !