உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தொடர் சிகிச்சை

சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தொடர் சிகிச்சை

சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு, மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, முன்னங்காலில் ஏற்பட்ட புண்ணால், 2004 முதல், அவதிக்குள்ளாகி வருகிறது.

காசநோய் அறிகுறி தென்பட்டதால், 2013ல், கோவிலுக்கு சொந்தமான மாந்தோப்பில் வைத்து பராமரிக்கப்படுகிறது.புண்ணால், தசைப்பிடிப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக, படுத்த படுக்கையாக உள்ளது. கால்நடை டாக்டர்கள் குழு, யானைக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கிறது.சேலம், நாமக்கல் மாவட்ட வன உயிரின காப்பாளர் சரவணன் கூறியதாவது: ராஜேஸ்வரிக்கு, எந்த நோயின் தாக்கமும் இல்லை. புண்ணால், நிற்க முடியாமல் அவதிப்படுகிறது. ஓரிரு நாட்களாக, உணவு உட்கொள்ளாத நிலையில், நேற்று, 5 கிலோ தர்பூசணி பழங்களை சாப்பிட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், உயிருக்கு ஆபத்தில்லை. யானை, எழுந்து நடக்கும் வரை, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !