ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED :2789 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில்பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கருட உருவம் பொறித்த கொடியை பக்தர்கள் சுமந்து ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். ரகுராம பட்டர் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு தீபாராதனை கட்டப்பட்டது. இரவு அன்னவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி லதா, அலுவலர்கள் பூபதி, வசந்த் செய்தனர்.