பழநி முருகன் கோவிலில் தங்க ரதம் 5 நாள் நிறுத்தம்
ADDED :2861 days ago
பழநி : பழநி முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, மார்ச், 28 முதல் ஏப்., 1 வரை, தங்க ரதம் புறப்பாடு நிறுத்தப்படுகிறது. பழநி மலைக் கோவிலில், தினமும் இரவு, 7:00 மணிக்கு தங்க ரதத்தில், சின்னக்குமாரசாமி உலா வருதல் நடக்கிறது. பக்தர்கள், 2,000 ரூபாய் செலுத்தி, தங்க ரதம் இழுக்கின்றனர். தைப்பூசம், கார்த்திகை, நவராத்திரி, பங்குனி உத்திரம் விழாக் காலங்களில், கூட்ட நெரிசல் காரணமாக, தங்க ரதம் நிறுத்தப்படும். இதன்படி, மார்ச், 24ல் பங்குனி உத்திர விழா துவங்கி, ஏப்., 2 வரை நடக்கிறது. மார்ச், 28 முதல் ஏப்., 1 வரை, ஐந்து நாட்கள் தங்க ரதம் புறப்பாடு கிடையாது. மார்ச் 28ல், கோவில் சார்பில், தங்க ரதம் புறப்பாடு நடக்கிறது; பக்தர்கள் இழுக்க அனுமதி கிடையாது.