உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை கோவில் ஏப்ரல், 27ல் கும்பாபிஷேகம்

நெல்லை கோவில் ஏப்ரல், 27ல் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம், ஏப்., 27ல் நடக்க உள்ளது. நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில், தாமிரசபையை கொண்டது, நெல்லையப்பர் கோவில். இங்கு, 2004 ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது இரண்டு ஆண்டுகள் தாமதமாக, ஏப்., 27, அதிகாலை 4:40 மணி முதல் 5:10 மணிக்குள் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து கோடி ரூபாயில் திருப்பணிகள் நடக்கின்றன. அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆகியோர், நேற்று நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !