தர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2793 days ago
சிக்கல்;சிக்கல் சிவதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பங்குனி முதல்வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.உலக நன்மைக்காக அஷ்டோத்திர நாமாவளி பாடப்பட்டது. குருசாமி நாகரெத்தினம், சற்குருநாதர் முனியாண்டி, விழாத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் வீரகுமார், துணைத்தலைவர் முனியசாமி, தகவல் தொடர்பாளர் பாக்கியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.