உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பாக்கம் அம்மன் கோவிலில் வசந்த கால மஹா நவராத்திரி

செம்பாக்கம் அம்மன் கோவிலில் வசந்த கால மஹா நவராத்திரி

செம்பாக்கம்: பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், 7ம் ஆண்டு, வசந்த கால மஹா நவராத்திரி நடைபெறுகிறது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, இரு ஆண்டுகளுக்கு முன், 9 அடி மூலிகை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஆண்டுதோறும் நடக்கும்,வசந்த கால நவராத்திரி விழா, 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஒன்பதுநாட்கள் நடைபெறும் விழாவில், தினமும், மஹாலட்சுமி, மஹாகாளி, ஞானசரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில், அம்மன்எழுந்தருளுவார்; சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.இரவில் இசை நிகழ்ச்சிகளும், பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. 28ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !