ஒரகடத்தில் ஸ்ரீராம நவமி விழா
ADDED :2863 days ago
திருக்கழுக்குன்றம்: ஒரகடத்தில் ஸ்ரீராம நவமி விழா கோலகலமாக நடந்தது திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடத்தில் அகோபலி மடத்தை சார்ந்த புராதானகோவிலான கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. விழா ஒட்டி, கோதண்டராமருக்கு விஷேச திருமஞ்னம் நடந்தது. அனுமந்தை வாகனத்தில் கோதண்டராமர் மலர் அலங்காரதத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். கிராமத்தினர் வழிநெடுக அர்ச்னை செய்து ராமரை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது.